×

பரமக்குடி அருகே விபத்தில் 7 பேர் படுகாயம்

பரமக்குடி,பிப்.12: பரமக்குடி அருகே கார், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த பத்மாவதி, தனது உறவினர்களுடன் மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது காருக்கு முன்னால் ஒரு கிரேன் சென்றுள்ளது. அந்த கிரேன் மீது கார் மோதிய நிலையில் தொடர்ந்து பின்னால் வந்த சரக்கு வாகனம் கார் மீது மோதி உள்ளது.

இதில் அருகில் இருந்த கால்வாயில் கார் இறங்கியுள்ளது. சரக்கு வாகனமும் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் மற்றும் சரக்கு வாகனத்தில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பத்மாவதி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post பரமக்குடி அருகே விபத்தில் 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Padmavathi ,Ramanathapuram ,Madurai ,
× RELATED தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி..!!